கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: கடக ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்பத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் தங்கள் பணம் உடைமைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
மனதில் நிம்மதி இருக்காது. பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்களே எதிர்பாராமல் கோபப்பட்டு விடுவீர்கள். அதை தவிர்த்திடுங்கள். நிதி நிலையில் மாற்றம் இருக்காது என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். குடும்பத்தில் சில பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது.
அன்பர்கள் சிலர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதற்கு சாதகமாக கிரக நிலைகள் அமைந்துள்ளன. பெண்கள் முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |