மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.30, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.30, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: செலவுகளை குறைத்து இனி சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மிதுனம்: கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.

கடகம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு.

சிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும்.

கன்னி: மனைவிவழி உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: எடுத்த வேலையை போராடி முடிக்க வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.

மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மீனம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE