மேஷம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22

By KU BUREAU

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதனால் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். இதுநாள்வரை தங்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. அதனால் மனதில் நிம்மதி ஏற்படும்.

சக பணியாளர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

குடும்பச் சூழ்நிலை ஓரளவே மனநிம்மதியை தரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் இப்போது நடக்கும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி கந்தர் அனுபூதி சொல்லி வாருங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE