‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வருகிறார் நடிகை கயாடு லோஹர்.
அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர் கயாடு லோஹர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான்.
2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான ‘முகில்பெடெட்’ மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லுரி', மராத்தியில் 'I Prem U' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கயாடு லோஹர் இப்போது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார்.
நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர் பட்டாளம் விரிவடைந்து வரும் அதேவேளையில், முன்னணி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் மிகுதியாகி இருக்கிறது.
தற்போது அவர் ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வருகிறார் கயாடு லோஹர்.
டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கும் படம் ‘இதயம் முரளி’. இதில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். இதில் கயாடு லோஹர், பிரக்யா நாக்ரா நடிக்கின்றனர்.
கயாடு லோகர் தனது ‘டிராகன்’ படம் மூலம் 2கே கிட்ஸ் ரசிகர் பட்டாளங்களை ஈர்த்ததுடன், அதில் தனது முத்திரையைப் பதிக்கும் வகையிலான நடிப்புத் திறனை பதிவு செய்திருப்பதும் அவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.