டானா புயல் பாதிப்பு எத்தகையது? - போட்டோ ஸ்டோரி


1 / 25

வங்கக் கடலில் உருவான டானா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. 

2 / 25

ஒடிசா, மேற்கு வங்கம் இடையே டானா புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

3 / 25

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

4 / 25

ஒடிசா மாநிலத்தில் 14 மாவட்டங்கள் டானா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

5 / 25

புயல் பாதித்த பகுதிகளை ஒடிசா முதல்வர் மோகன் மாஜி நேற்று பார்வையிட்டார்.  
 

6 / 25

“மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை" என்று ஒடிசா முதல்வர் தெரிவித்தார்.

7 / 25

மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் பேர் புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

8 / 25

மேற்கு வங்கத்தில் 8 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. முர்ஷிதாபாத் பகுதியில் மழை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

9 / 25

வியாழக்கிழமை ஒடிசாவின் புவனேஸ்வர், மேற்குவங்கத்தின் கொல்கத்தா விமான நிலையங்கள் மூடப்பட்டன. 300 விமான சேவைகள், 552 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

10 / 25

டானா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. 
 

11 / 25

ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமையும் மழை நீடித்தது. ரயில், விமான சேவைகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

12 / 25
13 / 25
14 / 25
15 / 25
16 / 25
17 / 25
18 / 25
19 / 25
20 / 25
21 / 25
22 / 25
23 / 25
24 / 25
25 / 25
x