அண்ணா வாழ்வின் அரிய தருணங்கள்...


1 / 12
1968-ல் அமெரிக்கா சென்றிருந்த அண்ணாவுக்கு யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலம் ‘சப் ஃபெல்லோ’ எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தின் திமோதி டுவைட் கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குள் பற்றி வகுப்பும் நடத்தினார். திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் பிரதிகளை அக்கல்லூரிக்கு வழங்கினார். திமோதி டுவைட் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார் அண்ணா.
2 / 12
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் நெடுஞ்செழியன். அருகில் அண்ணா...
3 / 12
1967-ல் சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கக் காரணமாக இருந்த அரிசி, சென்னையில் பிளாட்பாரத்தில் விற்கப்படும் காட்சி. அந்தக் காலகட்டத்தில் ரேஷன் கடையில் பச்சரிசி, புழுங்கலரிசி கிடைக்கவில்லை. ஆனால், வெளிச் சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டது. 1970-களில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியின் விளைவாக அரிசி பற்றாக்குறை நிரந்தரமாக நீங்கியது.
4 / 12
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், திமுக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங்கை ராஜ் பவனில் சந்தித்துப் பேசுகிறார். அருகில் கருணாநிதி, நெடுஞ்செழியன்.
5 / 12
கட்சி எல்லைகளைத் தாண்டி காமராஜர் மீது அண்ணா கொண்டிருந்த மதிப்பு இன்றைய அரசியல் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியப் பாடம்.
6 / 12
இந்தியா வந்திருந்த ஐநா பொதுச் செயலர் யூ.தான்ட் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் அண்ணாவை டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். அருகில் காமராஜர்...
7 / 12
1967 ஜூன் 3-ல் சென்னை வந்திருந்த பிரெஞ்சு தொலைக்காட்சி சேனல் செய்தியாளர்கள், முதல்வர் அண்ணாவிடம் நேர்காணல் நடத்தும் காட்சி...
8 / 12
ஐநா தலைமையகத்துக்குச் சென்றிருந்த அண்ணாவை ஐநா அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்துகிறார் ஐநாவுக்கான இந்தியத் தூதர் ஜி.பார்த்தசாரதி.
9 / 12
நியூயார்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் இந்திய மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் அண்ணா...
10 / 12
அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாவுக்கு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு...
11 / 12
1968-ல் பிரான்ஸ் அரசின் சார்பில் தமிழக மீன்வளத் துறைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட படகில் பயணிக்கும் முதல்வர் அண்ணா. படகில் அண்ணாவின் எதிர்ப்புறம் அமர்ந்திருப்பவர் பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி க்ளேய்ரியாக்ஸ்
12 / 12
1968-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்த அண்ணா, டோக்கியோவில் உள்ள கொகுஸாய் சர்வதேசக் கலையரங்கு முன்பாக...
x