ஜெயலலிதா... சில தருணங்கள்


1 / 18
ஜெயலலிதா முதன்முதலாகக் கதாநாயகியாக நடித்த கன்னடப் படமான ‘சின்னாட கோம்பே’ படத்தின் படப்பிடிப்பில், நடிகர் கல்யாண்குமாருடன்.
2 / 18
தனது தாய் சந்தியா, ஒய்.ஜி.பார்த்தசாரதி, திருமதி ஒய்.ஜி.பி, நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஜெயலலிதா (1964)
3 / 18
1984 ஏப்ரல் 21-ல், டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்கும் ஜெயலலிதா...
4 / 18
1984 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதா...
5 / 18
1989 ஜனவரி 21-ல் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ஜெயலலிதா...
6 / 18
1989-ல், போடிநாயக்கனூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் ஜெயலலிதா.
7 / 18
1991 மார்ச் 19-ல், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி.
8 / 18
1989 பிப்ரவரி 6-ல் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
9 / 18
1989 மார்ச் 19-ல், அரசியலைவிட்டு விலகப்போவதில்லை எனும் தனது அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசிக்கிறார் ஜெயலலிதா. அருகில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
10 / 18
1991 ஏப்ரல் 4-ல், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தியுடன் ஜெயலலிதா. அருகில் வாழப்பாடி ராமமூர்த்தி, நெடுஞ்செழியன்.
11 / 18
1991-ல் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொள்ளும் ஜெயலலிதா
12 / 18
1991 ஜூலை 9-ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஸ்ரீராகவேந்திரர் படத்தைப் பரிசளிக்கும் நடிகர் ரஜினிகாந்த். அருகில் லதா ரஜினிகாந்த்.
13 / 18
1991 அக்டோபர் 25-ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரசிம்மராவுக்கு நினைவுப்பரிசை வழங்குகிறார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
14 / 18
1999-ல் டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜெயலலிதா...
15 / 18
டான்சி நில பேர வழக்கில் 3 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதா. அருகில் சசிகலா.
16 / 18
மறைந்த முன்னாள் முதல்வரும் நிதியமைச்சருமான இரா.நெடுஞ்செழியன் எழுதிய நூலை ஜெயலலிதா வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொள்கிறார்.
17 / 18
பெண் சிசுக் கொலையை ஒழித்திடும் நோக்கில் ஜெயலலிதா அரசு, தொட்டில் குழந்தை திட்டத்தை 1992-ல் கொண்டுவந்தது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 2001-ல் கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு முத்தமிடுகிறார் ஜெயலலிதா.
18 / 18
2012-ல், குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்கிறார் ஜெயலலிதா.
x