‘தலவன்’ படம் எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்


1 / 10
கொலையும் அதற்கான காரணங்களையும் தேடிப் பிடித்து கண்டறியும் வழக்கமான த்ரில்லர் கதைதான் என்றாலும், அதனை எந்த இடத்திலும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஜிஸ் ஜாய்.
2 / 10
வழமையிலிருந்து விடுபட இயக்குநர் சேர்த்திருக்கும் ‘ஈகோ’ ஃப்ளேவர் ருசியை கூட்டுகிறது. பிஜுமேனன் - ஆசிஃப் அலியும் முறுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் ‘அய்யப்பன் கோஷி’ வகையறா!
3 / 10
பிஜுமேனன் - ஆசிஃப் அலி மோதல் தான்படம் என நினைத்திருக்கும்போது, ‘யூடர்ன்’ அடித்து திரும்பும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது.
4 / 10
ஒவ்வொரு நூலாக பிடித்து அடுத்து என்ன என்ற ஆர்வமூட்டும் படம் எங்கேயும் சலிப்புதட்டாமல் விறுவிறுப்பாக நகர்வது பலம்.
5 / 10
காவல் துறையின் அதிகார அத்துமீறலையும், அவர்களுக்குள் நிகழும் ‘பழிவாங்கல்’ போக்கையும் அழுத்தமாக பதிய வைக்கிறது படம்.
6 / 10
இறுதி வரை யார் தான் கொலையாளி, அவருக்கான நோக்கம் என்ன என்பதை கணிக்க முடியாதபடி, கடக்க வைத்ததில் திரைக்கதை ஆசிரியர்கள் ஆனந்த் - சரத் வெற்றி பெற்றுள்ளனர்.
7 / 10
ஒவ்வொரு நபராக மாறி மாறி வரும்போது, இறுதியில் குற்றவாளியை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கட்டமைத்தது முழுமையான ‘எங்கேஜிங்’ த்ரில்லராக ரசிக்க வைக்கிறது.
8 / 10
விறைப்பான முகம், எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெடுவெடுப்பு பேச்சு, யாரையும் எதிர்க்கும் குணம், கரிசனமில்லா காவல் துறை அதிகாரியாக மிரட்டுகிறார் பிஜுமேனன்.
9 / 10
நேர்மையை தான் அணிந்திருக்கும் உடையின் ‘ஸ்டார்’களில் ஒன்றாக பொருத்திக் கொண்டு, யாருக்கும் அடிபணியாத, கதாபாத்திரத்தில் ஆசிஃப் அலி சிறப்பாக நடித்துள்ளார்.
10 / 10
பின்னணி இசை, ஒளிப்பதிவு நேர்த்தி. க்ரைம் - த்ரில்லர் ரசிகர்களுக்கு போரடிக்காத விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டமான இப்படம் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
x