எளிமையாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் - புகைப்படத் தொகுப்பு


1 / 16
நடிகர்கள் சித்தார்த் - அதிதி ராவ் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
2 / 16
இந்த ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
3 / 16
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தெலங்கானாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
4 / 16
திரை நட்சத்திரங்கள் பெரிதாக யாரையும் இந்த ஜோடி நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவில்லை. ரசிகர்களுக்கும் தகவல் சொல்லவில்லை.
5 / 16
இவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அப்போது தகவல் கிளம்பியது. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் இருவரும் தெரிவித்தனர்.
6 / 16
இது குறித்து விருது விழா ஒன்றில் பேசிய சித்தார்த், ”திருமணம் எப்போது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நாங்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்யவில்லை. பிரைவேட்டாக செய்தோம்” என்று கூறியிருந்தார்.
7 / 16
இப்போது அதிதி - சித்தார்த் திருமணம் முடிந்திருக்கிறது.
8 / 16
நிச்சயதார்த்தத்தைப் போலவே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கோயிலில் எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
9 / 16
இதுதொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள இருவரும் கேப்ஷனாக, “முடிவில்லாத அன்பும் காதலும் தொடங்கி இருக்கிறது. நீதான் என் எல்லாமே. மிஸ்டர் & மிஸஸ்!” என்று பதிவிட்டுள்ளார்கள்.
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16
x