வடிவேலு - சுந்தர்.சி காம்போவில் ‘கேங்கர்ஸ்’ பட ஸ்டில்ஸ்!


1 / 8
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘கேங்கர்ஸ்’ என்ற புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
2 / 8
இயக்குநர் சுந்தர். சி மற்றும் நடிகர் வடிவேலு காம்பினேஷனில் வெளியான ‘வின்னர்’, ‘தலைநகரம்’ உள்ளிட்டப் பல படங்கள் ஹிட் ஆகியிருக்கிறது. இதில் வடிவேலுவின் நகைச்சுவையும் அவரது கதாபாத்திர பெயர்களும் எப்போது பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் ரசிக்கக் கூடியவை.
3 / 8
இந்த ஹிட் காம்போ 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
4 / 8
இந்தப் படத்தை நடிகை குஷ்பு தயாரிக்க, சுந்தர். சி இயக்கி, நடித்திருக்கிறார். சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கிறார்.
5 / 8
‘கைப்புள்ள’, ‘வீரபாகு’ போன்ற வடிவேலுவின் கதாபாத்திரங்களைப் போல, ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் கதாபாத்திரமும் வடிவேலுக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர். சி.
6 / 8
கேத்ரீன் தெரசா, முனீஷ்காந்த், மைம் கோபி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
7 / 8
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து படத்தை வெளியிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார் சுந்தர். சி.
8 / 8
x