பிள்ளையாரைக் கொண்டாடிய தமிழ் சினிமா பாடல்கள் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


1 / 4
நடிகர்கள் ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான 'கரகாட்டக்காரன்’ படத்தின் கதையைப் போலவே அதன் பாடல்களும் பெரிதாகப் பேசப்பட்டது. இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தின் பாடல்களில் ‘முந்தி முந்தி விநாயகனே’ பிள்ளையாரை வழிபடும் வகையில் அமைந்திருந்தது.
2 / 4
’அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி மற்றும் சுசீலா குரலில் இடம்பெற்றிருக்கும் ‘அப்பனே அப்பனே’ பாடலும் விநாயகரை கொண்டாடும் வகையிலான பாடல்தான். நடிகர்கள் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும் ஸ்ரீபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
3 / 4
'அன்னை காளிகாம்பாள்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடனத்தில் அமர்க்களமான பாடலாக ‘கணே கணே கணேசா’ பாடல் அமைந்திருக்கும்.
4 / 4
அஜித் நடிப்பில், சிறுத்த சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘வேதாளம்’. இதில் அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘வீர விநாயகா..’பாடல் கொண்டாட்டமாக அமைந்திருக்கும். இதில் அஜித்தின் கதாபாத்திரப் பெயரே கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
x