விஜயகாந்த் வாழ்வில் சில முக்கிய தருணங்கள் - பிறந்தநாள் ஸ்பெஷல்


1 / 5
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 72-ஆவது பிறந்தநாள் இன்று (ஆக,25). மதுரையில் பிறந்த விஜயராஜ் அழகிரிசாமிக்கு இயல்பிலேயே சினிமா ஆசையும் ஆர்வமும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரையில் இருந்து சென்னை கிளம்பி வந்தவர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகும் நிராகரிப்புகளுக்குப் பிறகும் விஜயராஜ் - விஜயகாந்த்தாக சினிமாவில் கதாநாயகன் ஆனார்.
2 / 5
விஜயகாந்த் போலவே அவரது நண்பர் ராவுத்தருக்கும் சினிமா மீது கொள்ளை பிரியம். அதைவிட விஜயகாந்த் மீது அதீத அன்பு. நகமும் சதையுமாய் வலம் வந்தார்கள். ஹீரோவாக விஜயகாந்த் ஜொலிக்க ஆரம்பித்ததில் ராவுத்தருக்கு தவிர்க்க முடியாத பெரும் பங்கு இருக்கிறது. நண்பன் விஜயகாந்தை வைத்து படம் தயாரித்தது, அவருக்காக கதைகள் கேட்டது என ராவுத்தர் விஜயகாந்த் மீதும், விஜயகாந்த் ராவுத்தர் மீதும் அலாதி அன்பு வைத்திருந்தனர்.
3 / 5
நடிகர் விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1999-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது மிக முக்கியமான காலக்கட்டம் எனலாம். அந்த சமயத்தில் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது. வெளிநாடுகளில் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி அந்தக் கடனை அடைத்தது, நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம் என பல விஷயங்களை செய்து கொடுத்தார்.
4 / 5
திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுடன் போட்டியிடும் விதமாகவும் மக்கள் பணி செய்யும் நோக்கிலும் விஜயகாந்த் தேமுதிக என்ற தனது அரசியல் கட்சியை கடந்த 2005-ல் தொடங்கினார். இது திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்டது. பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு தேமுதிக கூட்டணி வைத்தது. பின்னர் விஜயகாந்தின் மோசமான உடல்நிலை மற்றும் கட்சி எடுத்த சில தவறான முடிவுகள் காரணமாக தேமுதிகவின் சரிவு தொடங்கியது.
5 / 5
இளம் நடிகர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியர் விஜயகாந்த். விஜய், சூர்யா போன்றோரின் ஆரம்ப கால படங்களில் இவர் நடித்தது அவர்களின் சினிமா பயணத்தில் பேருதவியாக அமைந்தது. அதுபோல, படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தினார். தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
x