பழுப்பு அரிசி தரும் 5 பலன்கள்!


1 / 7
பழுப்பு அரிசி அல்லது பிரவுன் ரைஸ் எனப்படும் அரிசியின் மேல் உள்ள தவிட்டு உறை பாலிஷ் செய்து நீக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
2 / 7
பழுப்பு அரிசிப் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை சீர்கேடுகளால் பரவும் நோய்களுக்குத் தீர்வளிக்கும் தன்மை பழுப்பு அரிசிக்கு உண்டு. அது தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள் இங்கே...
3 / 7
பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்தைத் தூண்டுகிறது. அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பழுப்பு அரிசியை உட்கொள்ளலாம்.
4 / 7
உடலில் உள்ள கொழுப்பு அளவை பழுப்பு அரிசி சீர்ப்படுத்தும். இதன் மூலம் இதயக் கோளாறுகளைத் தள்ளி வைக்கலாம்.
5 / 7
பழுப்பு அரிசியில் உள்ள அதிக மாங்கனீசு சத்து, நரம்பு மண்டலத்தையும் இனப்பெருக்க உறுப்புகளையும் பலப்படுத்தக்கூடியது.
6 / 7
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதிலாகப் பழுப்பு அரிசி, சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
7 / 7
ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பழுப்பு அரிசியை பரிந்துரைக்கின்றனர். அதேநேரம், இந்த அரிசியையும் அளவாகவே சாப்பிட வேண்டும்.
x