வெள்ளைக் கொண்டைக்கடலை உண்டால் கிட்டும் 6 நன்மைகள்!


1 / 9
புரதம் நிறைந்த வெள்ளைக் கொண்டைக்கடலையை சில மணி நேரம் ஊற வைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் பொதுவாக ‘சென்னா’ என்று அறியப்படும் வெள்ளை கொண்டைக்கடலையின் நன்மைகளின் பட்டியல் இதோ...
2 / 9
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்ய வெள்ளை கொண்டைக்கடலை உதவியாக இருக்கிறது.
3 / 9
எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், ரத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புரதத்தை அதிகம் தருகிறது வெள்ளை கொண்டைக்கடலை.
4 / 9
நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் மாங்கனீசு ‘வெள்ளை கொண்டைக்கடலை’யில் அதிகமாக இருக்கிறது.
5 / 9
ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலையை உட்கொண்டால் அன்றாட தேவையில் 84.5% மாங்கனீசு கிடைக்கும்.
6 / 9
பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்களை கொண்டிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை சீராகப் பராமரிக்க வெள்ளை கொண்டைக்கடலை உதவுகிறது.
7 / 9
வெள்ளை கொண்டைக்கடலை இரும்புச்சத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
8 / 9
வெள்ளை கொண்டைக்கடலை குறைந்த சர்க்கரை அளவை கொண்டிருப்பதால், மெதுவாகச் செரிமானம் அடையும், எடை குறைப்புக்கும் உதவும்.
9 / 9
கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்த வெள்ளை கொண்டைக்கடலை உதவுகிறது.
x