Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
‘ஆவேஷம்’ முதல் ‘மாமன்னன்’ வரை - தவறவிடக் கூடாத 10 ஃபஹத் ஃபாசில் படங்கள்
KU BUREAU
08 Aug, 2024 12:45 PM
1
/ 10
மகேஷிண்டே ப்ரதிகாரம்: மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் நடித்திருப்பார் ஃபஹத். இப்படம் தமிழிலும் ரீமேக் ஆனது.
2
/ 10
மாலிக்: ‘நாயகன்’ பாணியிலான இந்த திரைப்படத்தில் நடிப்பில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பார் ஃபஹத். இளவயது, நடுத்தர, முதிய கதாபாத்திரங்களை வெவ்வேறு பரிணாமங்களை காட்டியிருப்பார்.
3
/ 10
அன்னாயும் ரசூலும்: இயக்குநர் ராஜீவ் ரவியின் முதல் படமான இது காதல் கதையைக் கொண்டது. ஃபஹத் - ஆண்ட்ரியா இருவருமே போட்டி போட்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
4
/ 10
ஞான் பிரகாஷன்: வெளிநாட்டு ஆசையில் வாழும் ஒரு சோம்பேறி இளைஞன் கதாபாத்திரம் ஃபஹதுக்கு. இதில் பக்கத்து வீட்டு பையன் போல் தோன்ற வைக்கும் அவர் காமெடியில் அசத்தியிருப்பார்.
5
/ 10
அயோபின்டே புஸ்தகம்: சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதை. அமல் நீரட் இயக்கிய இப்படத்தில் காதல், செண்டிமெண்ட், எமோஷன் என பல முகங்களை ஃபஹத் காட்டியிருப்பார்
6
/ 10
ஜோஜி: மிகவும் சிம்பிளான ஒரு படம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தின் தழுவல். கரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படத்தின் தனது நெகட்டிவ் ஆன கேரக்டரின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் பயமுறுத்தியிருப்பார் ஃபஹத்.
7
/ 10
ஆவேஷம்: திரையரங்கிலும், அதனைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். இதில் காமெடி கலந்த வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரம் ஃபஹதுக்கு. வெளியானது முதல் இன்று வரை மீம்களில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் கேரக்டர்.
8
/ 10
மாமன்னன்: படத்தின் பிரதான கதாபாத்திரங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு வில்லன் கதாபாத்திரம் பரவலாக பாராட்டப்பட்ட சம்பவம் வேறு எந்த படத்துக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ரத்னவேல் என்ற கேரக்டரில் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார் ஃபஹத்.
9
/ 10
கும்ப்ளாங்கி நைட்ஸ்: மது சி. நாராயணன் இயக்கிய இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம். குறைவான காட்சிகளே வந்தாலும் க்ளைமாக்சில் கண்களாலேயே மிரட்டியிருப்பார்.
10
/ 10
தொண்டிமுதலும் திருக்சாக்ஷியும்: இதிலும் ஃபஹத் ஃபாசிலுக்கு எதிர்மறை கதாபாத்திரம் தான். படம் முழுக்க பார்க்கும் நமக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். திலீஷ் போத்தன் இயக்கிய இப்படத்துக்காக ஃபஹதுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
மேலும் ஆல்பங்கள்
#Fahad faasil
#fahad birthday
#பஹத் ஃபாசில்
#மாமன்னன்
#ஆவேஷம்
x