எப்போது நம்மை ‘தோல்வி’ அண்டாது? - ஜிக் ஜிக்லரின் 8 மேற்கோள்கள்


1 / 9
ஜிக் ஜிக்லர் ஒரு அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர், விற்பனைப் பிரதிநிதி மற்றும் புத்தக ஆசிரியர். மிகவும் வெற்றிகரமான தன்னம்பிக்கை பேச்சாளராக இருந்த இவருடைய தன்னம்பிக்கை பேச்சுககள் மிகவும் புகழ்பெற்றவை. இவரது 9 மேற்கோள்கள் இங்கே...
2 / 9
“நேர்மை மட்டுமே ஒருவனை சிறந்த தலைவனாக்காது என்பது நிச்சயமான உண்மை. ஆனால், நேர்மையின்மை ஒருவனை நிச்சயமாய் தலைவனாக்காது.”
3 / 9
“ஒரு சாதனையைச் செய்ய பிரம்மாண்டமான ஆரம்பமெல்லாம் ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஏதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு செயலை ஆரம்பித்தால் மட்டுமே பிரம்மாண்டத்தை அடைய முடியும்.”
4 / 9
“அடுத்தவர்களை நீங்கள் உற்சாகப்படுத்தும்போது உங்களுக்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுக்கின்றது. உற்சாகமே மனிதர்களின் நடுவே வித்தியாசத்தைக் காட்டுகின்றது.”
5 / 9
“சிறந்தது வரும் என எதிர்பாருங்கள். மோசமானதற்கு தயாராயிருங்கள். வருவதில் முழு ஆதாயம் பெறத்தவறாதீர்கள்.”
6 / 9
“தோல்வியிலிருந்து நீங்கள் எதையாவது உருப்படியாகக் கற்றுக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தோற்கவே இல்லை!”
7 / 9
“உங்களின் உயர்வின் அளவை நிர்ணயிப்பது உங்கள் கெட்டிக்காரத்தனம் அல்ல. உங்களுடைய மனப்பாங்கே.”
8 / 9
“ஒரு விஷயத்தில் உங்களுக்கு இருக்கும் திறமை உங்களுக்கே தெரியும்போதுதான் அந்த விஷயத்தில் உங்களுக்கு பேரார்வம் பிறக்கின்றது.”
9 / 9
“மனிதர்களுக்கு உங்களைப் பிடித்தால் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். நம்பினால் உங்களிடம் வியாபாரம் செய்ய முன்வருவார்கள்.”
x