News In Pics: ஆடிப்பெருக்கு - பேரூர் படித்துறையில் குவிந்த பக்தர்கள்!


1 / 21
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பேரூர் படித்துறை - நொய்யல் ஆற்றங்கரையில் இன்று சனிக்கிழமை காலை 7 மணி அளவில் பொதுமக்கள் குவிந்தனர். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 21
ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.
3 / 21
ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
4 / 21
ஆடிப்பெருக்கு நாளில் இல்லத்திலும் ஆற்றங்கரைகளிலும் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதுண்டு.
5 / 21
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறை - நொய்யல் ஆற்றங்கரையில் பக்கதர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
6 / 21
ஏராளமாக பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் காவல் துறையினர் ஏராளமானோர் பேரூர் படித்துறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
7 / 21
மழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால் பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21
x