Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
News In Pics: காவிரி - கொள்ளிடத்தில் கரை புரளும் வெள்ளம்!
KU BUREAU
01 Aug, 2024 04:20 PM
1
/ 8
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. படங்கள்: எம்.மூர்த்தி
2
/ 8
ஸ்ரீரங்கம் - நம்பர்.1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் புதிய பாலத்தின் அருகே பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.7.50 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
3
/ 8
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தில் கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
4
/ 8
தண்ணீர் அதிக அளவில் செல்வதாலும் இரவு நேரம் என்பதாலும் இந்த தடுப்புச் சுவர் எவ்வளவு நீளத்துக்கு உடைந்துள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
5
/ 8
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் மிகுதியாக வரும் வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
6
/ 8
கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருப்பதால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
7
/ 8
எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் விழும் அபாய நிலையை எட்டி உள்ளதால், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் காலை 7 மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
8
/ 8
கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆல்பங்கள்
#Cauvery
#Cauvery Water
#Kollidam
#Floods
#காவிரி
#கொள்ளிடம்
#Kollidam River
#கொள்ளிடம் ஆறு
#வெள்ளம்
#Mettur Dam
#ஸ்ரீரங்கம்
#Srirangam
x