Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
News in pics: கேரளாவை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு துயரம்!
KU BUREAU
30 Jul, 2024 09:31 PM
1
/ 25
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்தது. 125-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறத்தாழ 100 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2
/ 25
ராணுவ உதவியுடன் மீட்புப் பணி தொடரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு” என்று குறிப்பிட்டார்.
3
/ 25
உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுவதாக தெரிவித்த அவர், 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
4
/ 25
வயநாட்டில் 300 மில்லி மீட்டர் மழை, சூரல்மலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு. பல இடங்களில் நிலச்சரிவு என்ற செய்தி காலை 7 மணிக்கெல்லாம் ஊடகங்களில் தெறித்து விழுந்தன. அப்போது 7 என்று தொடங்கிய உயிர் பலி எண்ணிக்கை இரவு 9 மணிக்கு இந்தச் செய்தியை பதிவு செய்தபோது 120-ஐ கடந்து சென்று கொண்டிருந்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.
5
/ 25
கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
6
/ 25
கேரள நிலபரப்பில் 14.5 சதவீதம் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியவை. நிபுணர்களின் கூற்றின்படி ஆலப்புழாவைத் தவிர கேரளாவின் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து கொண்டவையாகவே உள்ளன எனக் கூறுகின்றனர்.
7
/ 25
கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழுவானது 1848 சதுர கிலோமீட்டர் பரப்பளவை, அதாவது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 4.75 சதவீதமானது நிலச்சரிவால் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது என கணக்கிட்டுள்ளது.
8
/ 25
அண்மையில் ஏஐ உதவியுடன் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்று கேரளாவின் 13 சதவீதம் பகுதி நிலச்சரிவுகள் அபாயம் கொண்டது, அதுவும் குறிப்பாக இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், பத்தனம்திட்டா, வயநாடு பகுதிகள் மிக மிக அதிக அபாயம் கொண்ட பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
9
/ 25
பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு நிலச்சரிவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களும் அதிக பாதிப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
10
/ 25
அண்டை மாநிலமான நம் தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட நிறுவனத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
11
/ 25
இவர்களில் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்துவந்தனர். அந்த வீடுகளில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்களே.
12
/ 25
இந்த நிலையில் தான் இன்று அதிகாலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்த லைன் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
13
/ 25
இதற்கிடையில், 9497900402, 0471 2721566 ஆகிய 24 மணி நேர தொடர்பு எண்ணை கேரள மாநில கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. கேரள மாநிலம் சென்ற தமிழக சுற்றுலா பயணிகளுக்காக 1070 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
14
/ 25
15
/ 25
16
/ 25
17
/ 25
18
/ 25
19
/ 25
20
/ 25
21
/ 25
22
/ 25
23
/ 25
24
/ 25
25
/ 25
மேலும் ஆல்பங்கள்
#wayanad
#landslides
#வயநாடு
#ஆல்பம்
#கேரளா
x