7 பட்ஜெட்... 7 கலர் சேலைகள் - நிர்மலா சீதாராமனும் நிறக் குறியீடும் | போட்டோ ஸ்டோரி


1 / 10
ஏழு முறை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு, நீலம், மஞ்சள், பிரவுன், ஆஃப்-ஒயிட் என இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சேலை அணிந்து வந்துள்ளார். அந்த சேலைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டவை. அது பட்ஜெட் தாக்கலில் சில மெசேஜ்களையும் சொல்லியுள்ளது கவனிக்கத்தக்கது.
2 / 10
செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஆந்திராவின் மங்களகிரி சேலையை அவர் அணிந்திருந்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 / 10
கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது நீல நிறத்தில் மேற்கு வங்கத்தின் காந்தா என அழைக்கப்படும் பூத்தையல் கைவினைக் கலை சேலையை அணிந்திருந்தார். அந்த பட்ஜெட்டில் மீன் வளம் மற்றும் கடல்சார் அறிவுப்புகள் அப்போது வெளியாகி இருந்தது.
4 / 10
2023-ல் சிவப்பு நிறத்திலான சேலையை அணிந்திருந்தார். அது கர்நாடகாவின் இல்கல் வகை பட்டு சேலை. அதில் ரதம், மயில், தாமரை போன்றவை இடம் பெற்று இருந்தன. அவர் கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 / 10
கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவர் மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் 2019 முதல் 2024 வரையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் போது அவர் மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில கைத்தறி நெசவு சேலைகளை அணிந்துள்ளார்.
6 / 10
2022-ல் ஒடிசாவின் போம்காய் எனப்படும் சேலையை பிரவுன் நிறத்தில் கட்டி இருந்தார்.
7 / 10
2021-ல் தெலங்கானாவின் போச்சம்பள்ளி சேலையை ஆஃப்-ஒயிட் நிறத்தில் கட்டி இருந்தார்.
8 / 10
2019-ல் பிங்க் நிறத்திலான மங்களகிரி சேலையை கட்டி இருந்தார்.
9 / 10
10 / 10
2020-ல் மஞ்சள் நிறத்திலான பட்டு சேலையை கட்டி இருந்தார்.
x