செலவு முதல் பரிசு வரை - ஆனந்த் அம்பானி திருமண விழா 10 தகவல்கள்


1 / 10
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 / 10
ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு அவரது தாய் நீடா அம்பானி ரூ.500 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அணிந்து வந்தார். உலகிலேயே விலை மதிப்புள்ள பொருட்களில் அந்த நெக்லஸும் ஒன்று என்று கூறப்படுகிறது. சுலோகா அம்பானியும் (ஆகாஷ் அம்பானியின் மனைவி) இதேபோன்ற நெக்லஸ் அணிந்திருந்தார்.
3 / 10
மணமகன் ஆனந்த் அம்பானி திருமணத்தின் போது கையில் கட்டியிருந்த பதேக் பிலிப்பி கடிகாரத்தின் விலை மட்டும் ரூ.67.5 கோடி என்று தெரியவந்துள்ளது.
4 / 10
திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கை கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி உள்ளார். அவர்களில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், விக்கி கவுஷல் உட்பட பலர் அடங்குவர்.
5 / 10
விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் பைகள், தங்க சங்கிலிகள், விலை உயர்ந்த காலணிகள் போன்ற பொருட்களும் விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ள
6 / 10
திருமணத்தில் பங்கேற்ற அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்திய கார்கள், உடைகள், ஆபரணங்கள், காலணிகள், கைப் பைகள் என ஒவ்வொன்றும் விலை உயர்ந்த பொருட்களாகவே இருந்தன. சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளையே அவர்கள் பயன்படுத்தினர்.
7 / 10
திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இருந்து திருமணம் முடியும் வரை செலவிடப்பட்ட தொகை ரூ.5,000 கோடியை தாண்டி விட்டதாக கூறுகின்றனர். இது இங்கிலாந்து இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு ஆன செலவை விட (163 மில்லியன் டாலர்) அதிகம் என்கின்றனர்.
8 / 10
ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் 300 மில்லியன் டாலர் தொகை செலவிடப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
9 / 10
உலகளவில் பிரபலமாக உள்ள ரிஹானா, ஜஸ்டின் பீபர் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இப்போது மிக பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக ஆனந்த் அம்பானியின் திருமணம் முடிந்து விட்டது.
10 / 10
திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளைப் போலவே, திருமணத்துக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் லண்டனில் நடைபெற உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளன.
x