ஓடிடியில் ‘மகாராஜா’ படம் பார்க்க 10 காரணங்கள்!


1 / 10
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் எந்தவித அயற்சியும் இல்லாமல் எங்கேஜிங்காக நகர்கிறது.
2 / 10
பழிவாங்கும் கதையை அபாரமான ‘நான் லீனியர்’ திரைக்கதையால் இறுதிவரை சுவாரசியத்துடன் கொண்டு சென்றிருப்பதன் மூலம், ஒரு படத்துக்கு திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறார் நித்திலன்.
3 / 10
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கதையின் பலத்தால் உயர்ந்து நிற்கும் படம் சுவாரஸ்யப்படுத்துகிறது.
4 / 10
தொடக்கத்தில் பல கதாபாத்திரங்கள், வெவ்வேறு சூழல்கள் என மாறி மாறி காண்பிக்கப்படும்போது என்ன சொல்ல வருகிறார்கள் எனறு தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகள் அவிழும்போது ஆச்சரியங்கள் வந்து அசத்துகின்றன.
5 / 10
குறிப்பாக இடைவேளையில் நிகழும் நாயகனின் ‘ட்ரான்ஸ்ஃபார்மேஷன்’ காட்சியும், அதற்கு இணையாக இறுதிப் பகுதியில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு நிகழும் ‘ட்ரான்ஸ்ஃபார்மேஷனு’ம் அட்டகாசம்.
6 / 10
படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிட காட்சிகளும் அதகளம் செய்கின்றன.
7 / 10
படத்தின் இறுதியில் வரும் கவித்துமான ஃப்ரேம் நிச்சயம் ரசிகர்களை ரசிக்க வைக்கும்.
8 / 10
அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், அதையொட்டி நீளும் விஷயங்களும் கவனிக்க வைக்கின்றன.
9 / 10
மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது.
10 / 10
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும் இப்படம் வித்தியாசமான திரையனுபவத்தை கொடுக்கிறது.
x