Cinema News in Pics: ‘தங்கலான்’ ட்ரெய்லர் முதல் அமீர் பேச்சு வரை


1 / 7
தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2 / 7
மம்மூட்டி - கவுதம் வாசுதேவ் மேனன்: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது. இதன் மூலம் கவுதம் மேனன் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.
3 / 7
அமீர் பேச்சு: “கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால் அதனாலேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என சொல்ல முடியாது. அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் விமர்சிக்கலாம்” என்றார்.
4 / 7
ஆஸ்கர் விருது குறித்து கீரவாணி: இசையமைப்பாளர் கீரவாணி சமீபத்திய பேட்டியில் “தாமதமாகவோ, முன்பாகவோ எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் அது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. ‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுலபி 2’ போன்ற படங்களுக்கான எனது இசையை ஒப்பிடும்போது ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு அல்ல” என தெரிவித்தார்.
5 / 7
மலையாளத்தில் அறிமுகமாகும் ரெடின் கிங்ஸ்லி: மலையாள நடிகர் திலீப் நடிப்பில் உருவாகி வரும் ‘Bha Bha Ba’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இதன் மூலம் நடிகராக மலையாளத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
6 / 7
ஓடிடியில் மகாராஜா: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை பேசிய இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்தது. இந்நிலையில் படம் வரும் ஜூலை 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
7 / 7
வெப்சீரிஸில் அறிமுகமாகும் த்ரிஷா: திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது முதல் முறையாக இணையத் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் சோனி லிவ் ஓடிடியில் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
x