2005 முதல் 2024 வரை: இந்தியாவை உலுக்கிய ஆன்மிக கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவங்கள்


1 / 15
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மத வழிபாட்டுக் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையில்லை. இந்தியாவில் இதுவரை அதிக உயிர் பலி ஏற்பட்ட ஆன்மிக கூட்ட நெரிசலின் தகவல் பட்டியல் இது...
2 / 15
2005: மதவழிபாட்டு கூட்ட நெரிசல் சம்பவத்தில் மிகவும் கொடூரமான நிகழ்வு கடந்த 2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்தது. அம்மாநிலத்தின் மந்த்ராதேவி கோயிலில் நடந்த வருடந்திர வழிபாட்டு யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் 350 பேர் உயிரிழந்தனர்.
3 / 15
2003: இந்தாண்டு ஆகஸ்ட் 27 அன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நடந்த கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்; 140 பேர் காயமடைந்தனர்.
4 / 15
2008: இந்தாண்டு செப். 30 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமூண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
5 / 15
2008: அதே ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறை சரிவுகள் ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 162 பேர் உயிரிழந்தனர்; 47 பேர் காயமடைந்தனர்.
6 / 15
2010 மார்ச் 4 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிரிபாலு மகாராஜின் ராம் ஜானகி கோயில் இலவச ஆடை மற்றும் உணவுகளை வாங்கச் சென்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 63 பேர் உயிரிழந்தனர்.
7 / 15
2011: இந்தாண்டு நவ.8 அன்று ஹரித்துவாரின் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர் கி பவுரி கட் என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
8 / 15
2011 ஜனவரி 14 அன்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் புல்மேடு என்ற இடத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 104 பக்தர்கள் பலியாகினர்; 40 பேர் காயமடைந்தனர்.
9 / 15
2012 நவம்பர் 19 அன்று பாட்னாவின் கங்கை கரையில் அதலாட் கட் என்ற இடத்தில் நடந்த சாத் பூஜையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
10 / 15
2013 அக்டோபர் 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் தாடியா மாவட்டத்தில் உள்ள ரதன்கர் கோயிலில் நடந்த நவராத்தி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பக்தர்கள் கடந்த செல்ல இருக்கும் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக வதந்தி பரவியதால் அந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
11 / 15
2014 அக்டோபர் 3 அன்று தசரா கொண்டாட்டம் முடிந்த சிறிது நேரத்தில் பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
12 / 15
2015 ஜூலை 14 அன்று ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த புஷ்கர விழாவின் தொடக்க நாளில் கோதாவரி ஆற்றின் கரையில் முக்கிய நீராடும் துறையில் அதிகமான பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்
13 / 15
2022 ஜனவரி 1 அன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான மாதா வைஷ்ணவோ தேவி கோயிலில் கூட்டம் அதிகமானதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
14 / 15
2023 மார்ச் 31 அன்று இந்தூர் நகரத்தில் உள்ள ஒரு கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஹவன் நிகழ்ச்சியின்போது பழமையான கிணற்றை மூடியிருந்த பலகை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
15 / 15
2024 ஜூலை 2 அன்று உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டுக் கூட்டம்) நிகழ்ச்சிக்கு மதியம் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில்தான் இந்தச் சோகமான சம்பவம் நடந்தது.
x