தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


1 / 8
தியேட்டர் ரிலீஸ்: நடிகர் ரஞ்சித், இயக்கி நடித்துள்ள படம் ‘கவுண்டம்பாளையம்’. அல்பியா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம்.
2 / 8
சோனியா அகர்வால் நடித்துள்ள ‘7G’ திரைப்படம் திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. ஸ்மிருதி வெங்கட், ஹாருன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
3 / 8
அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் கிருஷ்ணமணி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எமகாதகன்’. இதில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க, ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
4 / 8
ஓடிடி ரிலீஸ்: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.
5 / 8
பிருத்விராஜ், பசில் ஜோசப் நடித்துள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாளப் படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காண முடியும்.
6 / 8
மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ‘ஹரா’ திரைப்படம் வரும் ஜூலை 5-ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
7 / 8
நிவின் பாலியின் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
8 / 8
இணையத் தொடர்: பங்கஜ் திரிபாதியில் ‘மிர்சாபூர் 3’பாலிவுட் தொடரை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெள்ளிக்கிழமை காணலாம்.
x