News in Pics: விஜய் உரையில் கவனம் ஈர்த்த 10 கருத்துகள்


1 / 10
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியவற்றில் கவனம் ஈர்த்த 10 கருத்துகள் இவை: “நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, 100 சதவிகித உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.”
2 / 10
“மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள்.”
3 / 10
“அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன்.”
4 / 10
“எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு.”
5 / 10
“எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது.”
6 / 10
“ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்கள் உடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான்.”
7 / 10
“உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.”
8 / 10
“சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதை தவறவிட்டு விட்டார்கள் என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.”
9 / 10
“அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். ”
10 / 10
“தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.”
x