‘கல்கி 2898 ஏடி’ படம் எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்


1 / 10
சந்தேகமே இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சல்தான் என்று சொல்லவேண்டும். ஹாலிவுட்டில் பார்த்து வியந்த தத்ரூபமான கிராபிக்ஸ் இப்படத்தில் முழுமையாக சாத்தியமாகியிருக்கிறது.
2 / 10
எத்தனை கோடி செலவு செய்தாலும் இந்திய படங்களின் கிராபிக்ஸில் ஒருவித ப்ளாஸ்டிக் தன்மை இருப்பது புரியாத புதிராகவே இருந்தவந்தது. அந்தக் குறை ‘கல்கி’ படத்தின் மூலம் தீர்ந்திருப்பது சிறப்பு.
3 / 10
முடிந்தவரையில் தன்னுடைய ஸ்க்ரீன் ப்ரசன்ஸை கலகலப்பாக கொடுக்க முயன்றிருக்கிறார் பிரபாஸ். கிட்டத்தட்ட இப்படத்தில் அவர் ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோ கதாபாத்திரம் என்றுதான் சொல்லவேண்டும். திரையில் ஆதிக்கம் செலுத்துபவர் அமிதாப் பச்சன். நீண்ட தாடி, பிரம்மாண்ட 8 அடி உயரத்துடன் தீபிகாவை காப்பாற்ற அவர் போராடும் காட்சிகள் ஈர்க்கின்றன.
4 / 10
படத்தின் மெயின் வில்லன் கமல்தான் என்றாலும் படத்தில் மொத்தமே இரண்டே காட்சிகள்தான். ஆனால், அதிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, க்ளைமாக்ஸில் அவருடைய டிரான்ஸ்பர்மேஷன் வெறித்தனம்.
5 / 10
க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்டதே தெரியாத அளவுக்கு உழைத்த விஎஃப்எக்ஸ் குழு மற்றும் கலை இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். க்ளைமாக்ஸ் காட்சி திரையரங்கில் ஆரவாரத்தை கூட்டுகிறது.
6 / 10
ரூ.600 கோடியை கொட்டி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தில் திரைக்கதைக்கு குறைந்தபட்ச உழைப்பைக் கூட செலுத்தவில்லை என்பதை என்ன சொல்வது? என்னதான் மேக்கிங்கில் நேர்த்தியை காட்டியிருந்தாலும், படத்தின் காட்சியமைப்புகளில் புதிதாக ஒன்றுமே இல்லை.
7 / 10
‘ஸ்டார்ட் வார்ஸ்’, ‘ட்யூன்’, ‘மேட்ரிக்ஸ்’, ‘ப்ளேட் ரன்னர்’, சில மார்வெல் படங்கள் என கலந்து கட்டி ஒரு முழுநீள படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் நாக் அஸ்வின். ஆனால், அது வெறும் முயற்சியாகவே நின்றுபோய் விட்டது ஏமாற்றம்.
8 / 10
படம் தொடங்கி முதல் பாதி முழுவதுமே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் செல்கிறது. ஹீரோ என்ட்ரியே மிகவும் சலிப்பான ஒரு நீளமான சண்டைக் காட்சி. இதுபோல பல நீ....ள, நீ....ள காட்சிகள் படம் முழுக்க படுத்தி எடுக்கின்றன.
9 / 10
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றாலும், அவை ஒரு கட்டத்துக்கு ஓவர் டோஸ் ஆகிவிடுகின்றன. அதன் பிறகு ஷம்பாலா என்ற நகரத்துக்கு செல்வது, அங்கு நடக்கும் காட்சிகள் என மீண்டும் திரைக்கதை தொங்க ஆரம்பித்து விடுகிறது.
10 / 10
நம்மை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் மூன்று மணி நேரம் கட்டிப் போடும் மேஜிக்கை நிகழ்த்த தவறியிருக்கிறது இந்த ‘கல்கி 2898 ஏடி’.
x