நெட்ஃப்ளிக்ஸில் ‘மஹராஜ்’ படம் எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்


1 / 10
ஆமீர்கானின் மகன் ஜூனைத் கான் நடித்துள்ள ‘மஹராஜ்’ பாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகியுள்ளது. 1862- காலக்கட்டத்தை தொழில்நுட்பக் குழுவினர் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். நீதிமன்றம், அரண்மனை, பழங்கால வீடுகள், அச்சு இயந்திரங்கள் என அனைத்தும் சிறப்பாக உள்ளன.
2 / 10
யதுநாத் மஹராஜ் ஆக வரும் ஜெய்தீப் அஹ்லாவத் உடல்மொழியும், கர்ஸான்தாஸ் முல்ஜி ஆக வரும் ஜூனைத் கான் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
3 / 10
இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் வசனங்கள் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடவுள், மதம் சார்ந்த இடங்கள் பிரச்சார நெடிகள் இன்றி நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது.
4 / 10
கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த மூடப்பழக்க சடங்குகளுக்கு எதிராக நடந்த நீண்டநெடிய போராட்டத்தின் ஆவணப்பதிவாக இப்படம் அமைந்திருக்கிறது.
5 / 10
எளிய மனிதர்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம் என்பதை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த ‘மஹராஜ்’ திரைப்படம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது.
6 / 10
அண்மைக் காலமாக சென்சிட்டிவான டாப்பிக்காக மாறிவிட்ட, மதம் சார்ந்த இந்த திரைப்படம், 1862-ல நடப்பது போல் எடுத்திருப்பதால், ரொம்பவே மெதுவாக நகர்கிறது.
7 / 10
வேகமில்லாமல் படம் நகர்வது, பல நேரங்களில் ஒரு நாடகத்தைப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுத்து விடுகிறது.
8 / 10
படத்தில் வரும் பெண் கதாப்பாத்திரங்களின் துறுதுறுவென வரும் வேகத்துக்கு இணையாகக்கூட, ஆண் கதாப்பாத்திரங்கள் எதுவும் எழுதப்படாதது அயற்சியைக் கொடுக்கிறது.
9 / 10
படத்தின் இசையமைப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், அந்த காலக் கட்டத்துக்கான பாடலாகவோ, இசையாகவோ இல்லாமல், நவீன காலத்திய பாடல்களை ஒத்திருப்பது பொருந்தவில்லை.
10 / 10
விதவை திருமணம், பாலின சமத்துவம், பெண் விடுதலை பேசும் நாயகன் சமூக சீர்த்திருத்தவாதியாக இருந்தும், மஹராஜால் ஏமாற்றப்பட்ட நாயகியை ஏற்க மறுப்பது உறுத்தலாக இருக்கிறது.