2024-ல் இதுவரை கவனம் ஈர்த்த 12 மலையாளப் படங்கள்!


1 / 12
இந்த ஆண்டின் தொடக்கமே வினய் ஃபோர்ட்டின் ‘ஆட்டம்’ படத்துடன் அசத்தலாக தொடங்கியது. பாலியல் துன்புறுதலுக்கு ஆளான பெண்ணின் நீதி கோரும் போராட்டத்தில் ஆண்மனங்களின் அசிங்கத்தை பேசியது.
2 / 12
ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ த்ரில்லர் களத்தில் பாஸ் மார்க் வாங்கியது. மம்மூட்டியின் சிறப்புத் தோற்றம் அசத்தல்.
3 / 12
டோவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ இரண்டு குற்றங்களை தீர்க்கும் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியது.
4 / 12
நட்சத்திர அந்தஸ்தில்லாத வளரும் நடிகர்களை கொண்டு உருவான ‘பிரேமலு’ ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
5 / 12
மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ வித்தியாசமான திரையனுபவத்தால் ரசிகர்களை கவர்ந்தது.
6 / 12
இந்தாண்டின் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஹிட் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. ரூ.250 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டிய இப்படம் ‘குணா’ பட வசனம் மற்றும் இசையால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
7 / 12
ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ படம் முழுக்க முழுக்க ஜாலியாக கேளிக்கையுடன் கடக்கும். ஆனால், அதன் இறுதியில் ‘ரங்கா’வின் மனக்குமுறலையும், அடக்க முடியாத ஆதங்கத்தையும் உணர்வுகளின் வழியே பின்னியிருப்பார்கள்.
8 / 12
பிருத்விராஜின் ஜீவிதம் மிக்க உழைப்புக்காகவே ‘ஆடு ஜீவிதம்’ படம் கவனம் பெற்றது.
9 / 12
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ கோடம்பாக்கத்தில் நடக்கும் கதை. இதில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகுதே’ பாடல் படத்தின் ஆன்மா.
10 / 12
‘குருவாயூர் அம்பல நடையில்’ படத்தின் ஜாலியான கதைக்களத்தில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்தார் பிருத்விராஜ். படம் ரூ.80 கோடி வசூலைத் தாண்டியது.
11 / 12
பிஜு மேனன், ஆசிஃப் அலியின் ‘தலவன்’ இரு காவல் அதிகாரிகளுக்கிடையிலான ஈகோ க்ளாஷ். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படத்தைப் பார்த்து கமல் நேரில் அழைத்து ஆசிஃப் அலியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
12 / 12
ஊர்வசி - பார்வதியின் ‘உள்ளொழுக்கு’ அழுத்தமான கன்டென்ட் படைப்பாக உருவாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
x