2024-ல் இதுவரை கவனம் ஈர்த்த 10 தமிழ்ப் படங்கள்!


1 / 10
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ரூ.100 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் வசூல் கணக்கை தொடக்கி வைத்தது. அதீத வன்முறையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் உள்ளிட்ட விஷயங்களை பேசியது.
2 / 10
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அதன் கிராஃபிக்ஸால் ரசிகர்களை ஈர்த்தது.
3 / 10
பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ கிரிக்கெட்டின் வழியே ஊர் - காலனி ஏற்றத்தாழ்வுகளையும், ஒற்றுமையின் தேவையையும் உணர்த்தியது.
4 / 10
புறா பந்தயத்தை பேசியது ‘பைரி’.
5 / 10
மணிகண்டனின் ‘லவ்வர்’ டாக்ஸிக் காதலின் விளைவுகளைப் பேசியதுடன் திரைக்கதையாலும் கவனிக்கப்பட்டது
6 / 10
ஊர்வசியின் ‘J.பேபி’ எமோஷனலான ட்ராவல் குறைகளைத் தாண்டி நிறைவைத் தந்தது.
7 / 10
கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ட்ரெய்லர் பெரிதும் பாராட்டப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும், வித்தியாசமான க்ளைமாக்ஸ் உள்ளிட்ட புதிய முயற்சிகள் கவனிக்க வைத்தது.
8 / 10
ஹிப் ஹாப் ஆதியின் ‘பிடி சார்’ வழக்கமான காதல் கதையிலிருந்து விலகி பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை பேசியது. எடுத்துக்கொண்ட கதைக்கரு கவனிக்க வைத்தது. திரையாக்கத்தில் குறைகள் இருக்கவே செய்தன.
9 / 10
சூரியின் அட்டகாசமான நடிப்பில் ‘கருடன்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலைத்தாண்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
10 / 10
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பாலியல் வன்கொடுமை பிரச்சினையை களைத்துப் போடும் காட்சிகளில் வித்தியாசமாக அணுகியது வெகுஜன மக்களிடையே வரவேற்பை பெற்றது. படம் ரூ.100 கோடியை நோக்கி நகர்கிறது.
x