Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
‘ரயில்’ படம் எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்
KU BUREAU
21 Jun, 2024 07:31 PM
1
/ 10
மிகச் சொற்பமான முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு கிராமத்தின் வாழ்வியலையும், அந்நிலத்தின் மனிதர்களையும் யதார்த்துக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான ‘சமகால’ வெறுப்பை கரையச் செய்யும் அவரது எழுத்தும் நோக்கமும் வரவேற்கத்தக்கது.
2
/ 10
“இந்த பூமிக்கு நம்ம எல்லாரும் பொழைக்க வந்தவங்க தான்”, “பெருமுதலாளிகள் இங்க வந்து நிலம் வாங்குறாங்க. அவங்கள உங்களால தொட முடியாது. எளிய மக்கள தான் அடிப்பீங்க” என்ற வசனங்கள் அழுத்தம் கூட்டுகின்றன.
3
/ 10
குறிப்பாக, அந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக துபாய் சென்று திரும்பும் ஒருவர், “எல்லாருக்கும் வயிறு இருக்கு. பசிக்கும். துபாய்ல நான் புலம்பெயர் தொழிலாளர்தான்” என பேசும் இடம் கவனிக்க வைக்கிறது. குண்டு பல்பை மாட்டும் காட்சியில் இருவேறு மாநிலத்தவர்களின் மனநிலையை பிரதிபலித்திருப்பது சிறப்பு.
4
/ 10
மதுவால் சீரழியும் குடும்பம், பொருளாதார சூழல், கிராம மக்கள், வட்டார வழக்கு, வடமாநில தொழிலாளரின் கரிசனம், எதிர்பாராத விபத்து, அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சில எமோஷனல் காட்சிகள் ‘ரெட்’ சிக்னல் இல்லாமல் கடக்கின்றன.
5
/ 10
உள்ளூர்வாசி vs வடமாநிலத்தவர் என்ற முரணுக்குப் பின், கதை எதை நோக்கி நகர்கிறது என்பதில் தெளிவில்லை. நோக்கமின்றி நகரும் இரண்டாம் பாதியில் வரும் அழுகை, துயரக் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.
6
/ 10
வடமாநிலத்தவர்களின் பொருளாதார சூழல், அவர்களின் உணர்வுகள், புலம்பெயரும் அம்மக்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான நிர்பந்தம் ஆகிய எதையும் படம் அழுத்தமாக காட்சிப்படுத்தாமல், ‘நல்லவர்’ என்ற ஒற்றை புள்ளியில் சுருங்கியிருப்பது எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்க்கவில்லை.
7
/ 10
உள்ளூரில் இருப்பவர்கள் குடித்துகொண்டு திரிவதால் அவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பதை காட்சிப்படுத்தியதில் சார்புத் தன்மை இல்லாமல் இல்லை.
8
/ 10
வடமாநில மக்களை நல்லவர்களாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பாராட்டத்தக்கது என்றாலும், அவர்களின் ஆழமான வலியையும், மறுபுறம் உள்ளூர் மக்களின் எண்ணங்களையும் ‘பேலன்சிங்’காக அணுக முடியாமல் தடுமாறுகிறது படம்.
9
/ 10
உள்ளூர் மக்களுக்கான ஊதிய பாகுபாடு, வடமாநில தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல்கள் குறித்த எந்தப் பதிவும் இல்லாமல் மேலோட்டமாக நகர்வது சிக்கல்.
10
/ 10
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வியலையோ, உள்ளூர் மக்களின் உணர்வுகளையோ அழுத்தமாக காட்சிப்படுத்துவதிலிருந்து தடம் மாறியிருக்கும் இந்த ‘ரயில்’ வேறொரு ட்ராக்கில் பயணித்திருப்பதை படம் முடிந்து வெளியேறும்போது உணர முடிகிறது.
மேலும் ஆல்பங்கள்
#rail movie
#plus
#ரயில்
#விமர்சனம்
#சினிமா
x