News in Pics: அரசு பணம் ரூ.500 கோடியில் ஜெகன் கட்டிய ‘ரகசிய’ பங்களாக்கள்!


1 / 30
ஆந்திராவில் ஜெகன் ஆட்சியில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா மலைப் பகுதியில், அரசுப் பணம் ரூ. 500 கோடி செலவில் 7 சொகுசு பங்களாக்களை ரகசியமாக கட்டியுள்ளனர். இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
2 / 30
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார்.
3 / 30
இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின் ஒருபுறம் தரைமட்டமாக்கப்பட்டது.
4 / 30
இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், இங்கு சுற்றுலாவுக்கான கட்டிடங்கள் மட்டுமே கட்டப்படுகிறது என அப்போது அமைச்சராக இருந்த ரோஜா அறிவித்தார்.
5 / 30
விசாகப்பட்டினம் தலைநகராக அறிவித்ததும், அங்கு ஜெகன் தங்குவதற்கு சொகுசு பங்களா மிகவும் ரகசியமாக கட்டப்பட்டுள்ளது.
6 / 30
கடந்த 2 ஆண்டுகளாக இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தெலுங்கு தேசம் ஆட்சி வந்ததும் முன்னாள் அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாச ராவ், செய்தியாளர்களை அழைத்து கொண்டு அந்த சொகுசு பங்களாக்களை சுற்றி பார்க்க சென்றார்.
7 / 30
அங்கு மொத்தம் 7 சொகுசு பங்களாக்கள் அருகருகே கட்டப்பட்டுள்ளன. ரூ.500 கோடிக்கும் மேல் மக்கள் பணத்தை செலவு செய்துள்ளனர்.
8 / 30
இங்கு ஒவ்வொரு அறையிலும் டோட்டோ பிராண்ட் கம்மோடுகள் (பேசின்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒன்றின் விலை மட்டும் ரூ. 9 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் வரை உள்ளது.
9 / 30
கழிவறையில் குளிக்கும் டப்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை குறைந்த பட்சம் ரூ. 12 லட்சம் என கூறப்படுகிறது. கழிவறையில் ஏசி வசதியும் உள்ளது.
10 / 30
குளிர்காலத்தில் ஹீட்டர் வசதியும் உள்ளது. இவை சீதோஷ்ண நிலைக்கேற்ப தானாகவே இயங்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
11 / 30
ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறையும் 480 சதுர அடியில் கட்டியுள்ளனர்.
12 / 30
இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பங்களாவும் ஆச்சரியபட வைக்கிறது. இதில் உள்ள நாற்காலிகள், டேபிள்கள், கட்டில், மெத்தைகள், சினிமா அரங்கு, நீச்சல் குளம் என பார்ப்போரை வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு மின்விசிறியும் ரூ.7 லட்சம் வரை மதிப்பு கொண்டவை என கூறப்படுகிறது.
13 / 30
ஜெகன் தம்பதியினருக்கு ஒரு பங்களாவும், இரண்டு மகள்களுக்காக 2 பங்களாக்களும் கட்டப்பட்டுள்ளன.
14 / 30
தொழில் தொடங்க வெளிநாட்டிலிருந்து வரும் முக்கிய நபர்களுக்கு, மீதமுள்ள பங்களாக்கள் என மொத்தம் 7 பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது ஆந்திர மாநிலத்தில் வைரல் ஆகி வருகின்றன.
15 / 30
16 / 30
17 / 30
18 / 30
19 / 30
20 / 30
21 / 30
22 / 30
23 / 30
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30
x