யூசுப் பதான் முதல் ஸ்மிருதி இரானி வரை - ஸ்டார்களில் வென்றவர்களும் வீழ்ந்தவர்களும் @ மக்களவைத் தேர்தல் 2024


1 / 31
உத்தரப் பிரதேசத்தின் வாராணசி பாஜக வேட்பாளரான பிரதமர் மோடி 612970 வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை 1,52513 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
2 / 31
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி 6,87,649 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
3 / 31
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 10,10 972 வாக்குகள் பெற்று வெற்றி. காங்கிரஸ் வேட்பாளர் சோனல் ராமன்பாய் படேலை விட 7,44 716 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
4 / 31
உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான அகிலேஷ் யாதவ் 6,40 207 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
5 / 31
மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் கிரிக்கெட் வீரரான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுஃப் பதான் 5,24,516 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
6 / 31
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான அனுராக் சிங் தாக்குர் 6,07 068 வாக்குகள் பெற்று வெற்றி. காங்கிரஸ் வேட்பாளர் சட்பால் ரைசாடாவை விட 1,82 357 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
7 / 31
கேரளாவின் பத்தனம்திட்டா தொகுயில் பாஜக வேட்பாளரான அனில் கே ஆண்டனி 234406 வாக்குகளுடன் தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி 367623 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
8 / 31
கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 6,47 445 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ வேட்பாளரான ஆனி ராஜா 2,83 023 வாக்குகளுடன் தோல்வி. வாக்கு வித்தியாசம் 3,64 422.
9 / 31
ஆந்திராவின் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி 1,41,039 வாக்குகளுடன் தோல்வியடைந்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அவினாஷ் ரெட்டி 6,05,143 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
10 / 31
தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான அசாதுதீன் ஓவைசி 6,61,981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
11 / 31
உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளரான அருண் கோவில் 5,46,469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
12 / 31
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சசி தரூர் 3,58 155 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 3,42 078 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வித்தியாசம் 16,077 வாக்குகள்.
13 / 31
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி 3,72 032 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். காங்கிரஸ் வேட்பாளரான கிஷோரி லால் ஷர்மா 5,39 228 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,67 196.
14 / 31
கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகளுடன் வெற்றி அடைந்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதன் மூலம் கேரளாவில் தனது முதல் எம்.பி. கணக்கை தொடங்கியுள்ளது பாஜக.
15 / 31
கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 6,30 339 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ். எம்.படேல் 6,72 988 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் 42,649.
16 / 31
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளரான ராஜ்நாத் சிங் 6,12,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
17 / 31
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மஹுவா மொய்த்ரா 6,28,789 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
18 / 31
மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நிதின் கட்கரி 6,55,027 வாக்குகளுடன் வெற்றி.
19 / 31
உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரான ஹேமாமாலினி 5,10,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
20 / 31
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் 5,37 022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4,62 267 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். வாக்கு வித்தியாசம் 74,755.
21 / 31
மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக வேட்பாளரான பியூஸ் கோயல் 6,80,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
22 / 31
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) வேட்பாளர் சுப்ரியா சுலே 4,17 981 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
23 / 31
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா 7,50 830 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 4,73 747 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 2,77 083.
24 / 31
டெல்லியின் வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கன்னையா குமார் 6,85,673 வாக்குகளுடன் தோல்வியை தழுவியுள்ளார். பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 8,24,451 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
25 / 31
உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான டிம்பிள் யாதவ் 5,98 526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஜெய்வீர் சிங் 3,76 887 வாக்குகளுடன் தோற்றார். வாக்கு வித்தியாசம் 2,21,639.
26 / 31
உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங் 5,71 263 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பகத் ராம் 4,22 420 வாக்குகள் பெற்று தோற்றார். வாக்கு வித்தியாசம் 1,48 843.
27 / 31
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான திக் விஜய் சிங் 6,12,654 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ரோட்மல் நகர் 7,58,743 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
28 / 31
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான பூபேஷ் பாகேல் 6,67,646 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சந்தோஷ் பாண்டே 7,12,057 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
29 / 31
ராஜஸ்தானின் அல்வர் தொகுதியில் பாஜக வேட்பாளரான பூபேந்திர யாதவ் 6,31 992 வாக்குகள் பெற்று வெற்றி. காங்கிரஸ் வேட்பாளர் லலித் யாதவ் 5,83 710 வாக்குகளுடன் தோல்வி. வாக்கு வித்தியாசம் 48,282.
30 / 31
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் மெகபூபா முப்தி 2,40,042 வாக்குகளுடன் தோல்வியை தழுவியுள்ளார்.
31 / 31
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் ஒமர் அப்துல்லா 2,68,339 வாக்குகளுடன் தோல்வி அடைந்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 4,72,481 வாக்குகளுடன் வெற்றி
x