சூரியின் ‘கருடன்’ எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்


1 / 10
கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டம், விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் - உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்‌ஷன் பரிணாமம் என சூரி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாராட்டுகள்!
2 / 10
விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எங்கும் தேங்காமல் அயற்சி கொடுக்காமல் என்கேஜிங்காக நகர்கிறது படம்.
3 / 10
இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம். சூரியின் ட்ரான்ஸ்ஃபமேஷன் காட்சிகள் சிறப்பு.
4 / 10
“நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”,“கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
5 / 10
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் காட்சிகள் தரும் உணர்வை இரட்டிப்பாக்குகிறது. குறிப்பாக அந்த இன்டர்வல் ப்ளாக் வெறித்தனம். ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் நேர்த்தி.
6 / 10
படத்தின் குறைகள் என்றால், அடிக்கடி வரும் கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ்.
7 / 10
சில வசனங்கள் கவனிக்க வைத்தாலும் “ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம்.
8 / 10
சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது.
9 / 10
எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?
10 / 10
கிட்டத்தட்ட ‘சுந்தரபாண்டியன்’ படத்தை நினைவூட்டும் கதையில் புதுமை இல்லை. அதனால் சில காட்சிகளையும், கதையின் போக்கையும் கணித்து விட முடிகிறது. இருப்பினும் விறுவிறுப்புடன் நகரும் படம் அதை பெரிய குறையாக கருதவிடாமல் கொண்டு செல்கிறது. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
x