ஓடிடியில் பார்க்க வேண்டிய 10 மலையாள காமெடி படங்கள்!


1 / 10
ஆவேஷம் (aavesham): ரவுடி ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் அதகள காமெடி அட்டாகசங்கள் தான் படம். ஜாலியாக நகரும் இப்படம் சில சர்ப்ரைஸ்களால் ‘வைப்’ மோடுக்கு மாறும். க்ளைமாக்ஸ் எமோஷனல். அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் காணக்கிடைக்கிறது.
2 / 10
ரோமாஞ்சம் (Romancham): பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் 7 பேச்சிலர்கள் ஓஜா பலகையை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முயற்சிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்தான் படம். நண்பர்கள் நிறைந்த வீட்டில் அளவற்றுக் கிடக்கும் நகைச்சுவை ரசிக்கத்தக்கது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
3 / 10
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (Jaya Jaya Jaya Jaya Hey): ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கும் இப்படம் திருமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பெண் ஒருவரின் பார்வையிலிருந்து பேசுகிறது. அதே சமயம் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
4 / 10
பால்து ஜன்வர் (Palthu Janwar): குடும்பத்தினர் வற்புறுத்தலின் காரணமாக கால்நடை ஆய்வாளராக சேரும் ஒருவர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நகைச்சுவையாகவும், ஃபீல்குட்டாகவும் சொல்லும் படம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
5 / 10
ன்னா தான் கேஸ் கொடு (Nna thaan case kodu): திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழும் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் வழக்கு ஒன்றை தொடக்கிறார். அதில் வென்றாரா? என்பது கதை. சிம்பிளான கதையை ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் பேசும் இப்படம் ஹாட் ஸ்டாரில் உள்ளது.
6 / 10
சவுதி வெள்ளக்கா (Saudi Vellaka): கோபத்தில் சிறுவனைத் தாக்கிவிடும் பக்கத்துவீட்டு பாட்டியும், அதனைத் தொடர்ந்து நடக்கும் வழக்கும் தான் படம். நுட்பமான நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும். மனித நேயம் மற்றும் இரக்கத்தை பேசும் இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.
7 / 10
சுலைக்கா மன்ஜில் (Sulaikha Manzil): திருமண நிகழ்வையொட்டி நடக்கும் காமெடி, ட்ராமா கலந்த குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படம். பாடல்கள் அடிபொலி! என்கேஜிங்காக செல்லும் ரசிக்க வைக்கும். ஹாட்ஸ்டாரில் உள்ளது.
8 / 10
மலையன்குஞ்சு (Malayankunju): இழப்பினால் ஏற்பட்ட வலியும், மனிதர்கள் மீதான அசௌகரியமும் எதிர்பாராத விபத்தின் மூலமாக அவனை மீண்டும் எப்படி மீட்டெடுக்கிறது என்பதுதான் ஒன்லைன். ஃபஹத்தின் நகைச்சுவைக்கலந்த கதாபாத்திரம் சிரிப்புக்கு கேரண்டி. படம் அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கும்.
9 / 10
பாச்சுவும் அத்புத விளக்கும் (Pachuvum Athbutha Vilakkum): ஆயுர்வேத பார்மஸியின் வாடகை கட்டிடத்தின் உரிமையாளராகும் வாய்ப்பு ஒருவனுக்கு கிடைக்கிறது. ஆனால் ஒரு கன்டிஷனுடன். அது என்ன? அதை எப்படி அவர் நிறைவேற்றினார் என்பது கதை. ஜாலியான ஃபீல்குட் ட்ராமா அமேசான் ப்ரைமில் உள்ளது.
10 / 10
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (Mukundan Unni Associates): வாகன விபத்துக் காப்பீட்டு உலகில் இயங்கும் மாஃபியா கும்பலைப் பெரும் பகடியுடன் சொல்லும் படம். வில்லன் தன்மையுடன் இருக்கும் நாயகனுக்கும் நாயகத் தன்மையையும் கொண்டிருக்கும் வில்லனுக்கும் இடையில் சிரித்து ரசிக்கத் தக்க பனிப் போரைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
x