பேட்டிங், பவுலிங்கில் ஐபிஎல் 2024-ல் கலக்கிய டாப் 10 வீரர்கள்!


1 / 10
விராட் கோலி: நடப்பு சீசனில் ஆரஞ்சு தொப்பி வின்னர் விராட் கோலி தான். இந்த தொடரில் 15 இன்னிங்ஸ்களில் சராசரி 61.75, ஸ்ட்ரைக் ரேட் 154 உடன் 741 ரன்கள் குவித்து டாப் ரன் ஸ்கோரர் ஆனார். இதில் ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 113.
2 / 10
ருதுராஜ் கெய்க்வாட்: நடப்பு சீசனில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புடன் பேட்டிங் ஆர்டரை துவக்கி வைத்த ருதுராஜ் கெய்க்வாட், ரன் வேட்டையில் டாப் 5 வீரர்களில் இரண்டாவது வீரராக உள்ளார். நடப்பு சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் சேர்த்து மொத்தமாக 583 ரன்கள் குவித்தார். சராசரி 53, ஸ்ட்ரைக் ரேட் 141.16, அதிகபட்ச ஸ்கோர் 108.
3 / 10
ரியான் பராக்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய சென்ஷேசன் ரியான் பராக். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர், 573 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த சீசனில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவரின் அதிகபட்ச ஸ்கோர் 84. எனினும், சராசரி 52.09, ஸ்ட்ரைக் ரேட் 149.21.
4 / 10
டிராவிஸ் ஹெட்: பாட் கம்மின்ஸின் தளபதியாக செயல்பட்ட டிராவிஸ் ஹெட் அதிரடியில் வெளுத்து வாங்கினார். சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி யுக்தியில் டிராவிஸ் ஹெட்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஒரு சதம், 4 அரை சதத்துடன் 567 ரன்கள் குவித்த அவரின் சராசரி 40.50, ஸ்ட்ரைக் ரேட் 191.55, அதிகபட்ச ஸ்கோர் 102.
5 / 10
சஞ்சு சாம்சன்: நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியை ஒற்றை மனிதனாக சுமந்து வெற்றியைத் தேடி கொடுத்த சஞ்சு மொத்தமாக 16 போட்டிகளில் 531 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 அரை சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 48.27, ஸ்ட்ரைக் ரெட் 153.46, அதிகபட்ச ஸ்கோர் 86. கேப்டனாக தோல்வி கண்டாலும், அவருக்கு இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது.
6 / 10
ஹர்ஷல் படேல்: இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்ஷல், வழக்கம் போல் தனது ஸ்லோயர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். 14 போட்டிகளில் 24 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சராசரி 19.87, எகனாமி 9.73. சிறந்த பந்துவீச்சு 3/15.
7 / 10
வருண் சக்கரவர்த்தி: நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. நடு ஓவர்களில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தும் துருப்பு சீட்டாக கொல்கத்தா அணிக்கு விளங்கிய இவரின் சராசரி 19.14, எகனாமி 8.04, சிறந்த பந்துவீச்சு 3/16.
8 / 10
ஜஸ்ப்ரீத் பும்ரா: மும்பை இந்தியன்ஸ் அணியில் நடப்பு சீசனின் ஒரே ஆறுதல் பும்ரா மட்டுமே. அந்த அணியில் இருந்து டாப் 15க்குள் இடம்பெற்ற ஒரே வீரரும் பும்ராவே. ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் 13 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்த்தி அசத்தல் பார்மை இந்த சீசனில் வெளிப்படுத்தி டாப் 3 பவுலராக இடம்பிடித்துள்ளார். அவரின் சராசரி 16.80, எகனாமி 6.48, சிறந்த பந்துவீச்சு 5/21.
9 / 10
நடராஜன்: ‘யார்க்கர்’ நட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் நடராஜன் வழக்கம் போல் இந்த சீசனிலும் தனது சிக்கன பந்துவீச்சால் எதிரணி ரன்கள் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தி தனது அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சாக 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 14 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்திய அவரின் சராசரி 24.47, எகனாமி 9.05 ஆகும்.
10 / 10
ஹர்ஷித் ராணா: கொல்கத்தா அணியின் லேட்டஸ்ட் வரவு இந்த ஹர்ஷித் ராணா. ஐபிஎல் பைனலில் ஒரு மெய்டன் ஓவருடன் 2 விக்கெட் என்பது சிறந்த பந்துவீச்சு. அவரின் அசத்தல் பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை தேடியது. நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரின் சராசரி 20.15, எகனாமி 9.05, சிறந்த பந்துவீச்சு 3/24.
x