டி.நடராஜன் ஏன் பெஸ்ட்? - ‘நம்பர்கள்’ சொல்லும் 10 காரணங்கள்


1 / 17
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை ஸ்விங் பவுலர் டி.நடராஜன், முன்பு ‘யார்க்கர்’ நட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இப்போதெல்லாம் அவரது பந்து வீச்சில் புதுரக உத்திகள் பல சேர்ந்துள்ளன. குறுகிய பவுண்டரிகள், லேசான - ஆனால் பவர் பேட்கள் என்ற பேட்ஸ்மென்களுக்கு சாதகங்கள் உள்ள பவுலர்களுக்கு எதிரான ஒரு வியாபாரச் சூழலில் தன் பந்து வீச்சில் புதிய வகைகளை சேர்த்து அதன் மூலம் பேட்டர்களைக் கட்டுப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பேசும்படிச் செய்துள்ளார் டி.நடராஜன்.
2 / 17
> நடராஜன் இப்போது வரை ஐபிஎல் தொடர்களில் 6 சீசன்களில் நட்டு 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.96. மட்டையடி பிட்ச்களில் அதுவும் எதிரணிகள் விளாசும் போட்டிகளில் நடராஜனின் சிக்கன விகிதம் ஓவருக்கு 8.83 என்பது சாதாரணமல்ல. தனிப்பட்ட முறையில் ஒருமுறை 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
3 / 17
> 2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபில் நடராஜனின் ஐபிஎல் கரியரை தொடங்கியது. அப்போது 2 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். அதன் பிறகு 2020 சீசனில் 16 விக்கெடுகள், 2021 சீசனில் காயம் காரணமாக 2 போட்டிகளில் 2 விக்கெட். 2022 ஐபிஎல் சீசனில் பெரிய அளவுக்கு மீண்டு வந்த நடராஜன் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பெஸ்ட் பவுலிங் ஃபிகர்.
4 / 17
> 2023 சீசனில் 12 போட்டிகளில் 10 விக்கெட். இந்த சீசனில் 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்து சீசனின் டாப் பவுலர்களில் 4-ம் இடத்தில் இருக்கிறார். சிக்கன விகிதத்தில் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா ஓவருக்கு 6.48 என்று டாப்பில் இருக்க, அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் டி.நடராஜன். பர்ப்பிள் கேப் டாப்பில் இருக்கும் ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவரின் சிக்கன விகிதம் 9.73. நடராஜன் இவரை விடவும் குறைவாக 8.83.
5 / 17
> உலகக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் தேர்வான ஆவேஷ் கான் 16 போட்டிகளில் 19 விக்கெட்; நடராஜன் 13 போட்டிகளில் 19 விக்கெட். ஆவேஷ் கானின் சிக்கன விகிதம் 9.59. ஆவேஷ் கான் ரிசர்வ் அணியிலாவது இடம்பிடித்தார், நடராஜன் பெயர் ‘பரிசீலிக்கப்பட்டது’ என்ற கதையோடு கரைந்துவிட்டது.
6 / 17
> இந்திய அணியிலேயே இடம்பிடித்த இடது கை ஸ்விங் பவுலர் அர்ஷ்தீப் சிங் நடப்பு ஐபிஎல் பவுலர்கள் பட்டியலில், 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார். இவரது சிக்கன விகிதம் 10.03. நடராஜனுடன் ஒப்பிடும்போது அதிகம். ஆனால், இவர் உலகக் கோப்பை டி20 அணிக்கு உள்ளே, நடராஜன் வெளியே. அதேபோல், ‘ஆல்ரவுண்டர்’ ஹர்திக் பாண்டியா 11 விக்கெட்டுகள் சிக்கன விகிதம் 10.75 ரன்கள். பேட்டிங்கிலும் 216 ரன்கள்தான். நடராஜன் உடன் ஒப்பிடும்போது இவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது இந்திய அணித்தேர்வின் ‘விளங்க முடியா கவிதைதான்’
7 / 17
> இந்தப் புள்ளி விவரங்கள் ஒருபுறமிருக்க, நடராஜன் பந்து வீச்சில் இப்போது மிகுந்த முதிர்ச்சி மிளிர்கிறது. கடினமான லெந்த்களைக் கண்டுப்பிடித்துக் கொண்டுள்ளார். யார்க்கரிலேயே ஸ்லோ யார்க்கரையும் சேர்த்துள்ளார். அனைத்திற்கும் மேலாக பேக் ஆஃப் லெந்த் ஸ்லோ ஷார்ட் பிட்ச் பந்துகளை கிட்டத்தட்ட பேட்டர்களின் தோள்பட்டை உயரத்திற்குக் குத்தி எழுப்புகிறார். இதை ஆடவே முடிவதில்லை என்பது இந்த ஐபிஎல் சீசன் நிதர்சனம்
8 / 17
> டுபிளெசிசிற்கு ஒரு போட்டியில் இத்தகைய உயரமான பேக் ஆஃப் லெந்த் பிட்ச் ஸ்லோ பவுன்சரை வீசி அவரை வீழ்த்தினார் நடராஜன். பாட் கமின்ஸ் நடராஜனை மிகத் திறமையாக பயன்படுத்துகிறார். பாட் கமின்ஸைப் பார்த்து இவரும் உத்வேகம் பெறுகிறார். புதுவித பந்துவீச்சுகளை தன் பவுலிங் ஆயுதப் பாசறையில் சேர்த்துக் கொள்கிறார். குறைந்த பட்சம் ஆவேஷ் கானுக்குப் பதிலாக ரிசர்வ் வீரராகவாவது சேர்த்திருந்தால் நடராஜனின் ஐபிஎல் தொடரின் சீரான முயற்சிகள் மதிக்கப்பட்டிருக்கும்.
9 / 17
> நடராஜன் போன்றோர் புறக்கணிக்கப்படுவது ஏன் எனக் கேட்டால், ‘ஐபிஎல் ஆட்டங்களை வைத்து தேர்வு செய்யவில்லை’ என்கிறார் ஜெய் ஷா. ஏன் தேர்வு செய்யக் கூடாது? தினேஷ் கார்த்திக் இல்லை? ரிங்கு சிங் இல்லை? ஹர்திக் பாண்டியாவை சேர்த்ததற்காக ஐபிஎல்-லிருந்து தேர்வு இல்லை என்று சப்பைக் கட்டுவதைக் கூடவா ஜெய் ஷாவினால் புரிந்துகொள்ள முடியவில்லை.
10 / 17
> ஐபிஎல் முழுவதும் பேட்டிங் பிட்சாகப் போட்டு விட்டு பேட்டர்களை ஐபிஎல் பெர்பார்மன்ஸ் வைத்து தேர்வு செய்ய முடியாது என்ற சப்பைக் கட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், ஐபிஎல் 2024-ன் பேட்டிங் சாதக பிட்ச்களில் தன் சொந்த திறமையை வளர்த்துக் கொண்டு சிக்கனமாக வீசும் நடராஜனை ஏன் இந்த வெட்டிக் கொள்கைக்காக பலிகடாவாக்கியது உண்மையான திறமை அணித் தேர்வில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே வருந்தமான உண்மை.
11 / 17
> தேர்வு செய்த வீரர்களை விட தேர்வு செய்யப்படாத அல்லது இந்திய அணித் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சிறப்பாக ஆடியுள்ளார்கள். பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், பவுலிங்கில் டி.நடராஜன் இருவரும் டி20 உலகக் கோப்பையில் இல்லை என்பது தமிழக வீரர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்ற தமிழக ரசிகர்கள் பலரின் சந்தேகத்துக்கும் நியாயம் சேர்க்கவே செய்கிறது.
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17
x