Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
ஓடிடியில் பார்க்க வேண்டிய 10 மலையாள திரைப்படங்கள்!
KU BUREAU
24 May, 2024 08:58 PM
1
/ 10
மஞ்ஞும்மல் பாய்ஸ் (Manjummel Boys): நண்பர்கள் இணைந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். நண்பர் ஒருவர் குணா குகையில் சிக்கிக்கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது கதை. ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் காணக்கிடைக்கிறது. ரிப்பீட் மோடுக்கு உகந்த திரை அனுபவம்.
2
/ 10
பிரேமலு (Premalu): காதல் தோல்வி, சரியான வேலை கிடைக்காதது என தன் வாழ்நாள் முழுதும் புறக்கணிக்கப்பட்ட ஒருவர், தனக்கு எதிரான குணம் கொண்ட பெண்ணை காதலிக்கிறார். அவர்களின் காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பது கதை. டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் படம் காணக்கிடைக்கிறது. காமெடி + காதல் ஜானரில் ஈர்க்கிறது.
3
/ 10
பிரமயுகம் (Brammayugam): சிதிலமடைந்த வீடொன்றில் தஞ்சம் புகும் தேவன் அந்த வீட்டில் நிகழும் நிகழும் மர்மங்களை அறிந்து, பின் அங்கிருந்து எப்படி வெளியேறினார் என்பது கதை. மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவான படம் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. புது திரையனுபவம் உறுதி.
4
/ 10
ஆட்டம் (aattam): 12 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய நாடக் குழுவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நியாயம் கிட்டியதா என்பது கதை. அட்டகாசமான திரைக்கதையில் பல விஷயங்களைப் பேசும் இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
5
/ 10
அன்வேஷிப்பின் கண்டேதும் (Anweshippin Kandethum): வெவ்வேறு சூழலில் நடக்கும் இரண்டு கொலைகளும், அந்த வழக்கைத் தீர்க்க போராடும் காவல் துறை அதிகாரியின் போராட்டம் தான் படம். டோவினோ தாமஸின் சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
6
/ 10
பலிமி (Falimy): காசி செல்கிறது ஒரு குடும்பம். உடைந்து கிடக்கும் அந்த குடும்ப உறவுகள் பயணத்தின் மூலம் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் கதை. உணர்வுப்பூர்வமான இப்படம் கலங்க வைத்து சிரிக்கவும் செய்யும். ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
7
/ 10
நேரு (Neru): மோகன்லால் நடிப்பில் உருவான கோர்ட் ரூம் ட்ராமா பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கான நீதியைப் பற்றி பேசுகிறது. என்கேஜிங்கான திரைக்கதை தாக்கத்தை தரக்கூடியது. படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ளது.
8
/ 10
உடல் (udal): மருமகள் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியரை கொலை செய்து விடுகிறார். சிறிதும் பிசகாமல் முடியும் இந்தக் கொலைக்குப் பின் அவ்வீட்டில் அந்த இரவு எப்படியாக விடிகிறது என்பதுதான் படம். அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கும் அட்டகாசமான திரைப்படம்.
9
/ 10
ஆர்டிஎக்ஸ் (RDX): தற்காப்பு பயிற்சி பெற்றவர்களுக்கும் மர்ம கும்பலுக்கும் இடையிலான பிரச்சினையை களமாக கொண்ட படம் ஆக்ஷன் காட்சிகள், காதல் சென்டிமென்ட் என எங்கேஜிங்காக நகரக்கூடியது. ஆக்ஷன் விரும்பிகளுக்கு நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
10
/ 10
தொட்டப்பன் (Thottappan): திருடிப் பிழைக்கும் இரு நண்பர்களில் ஒருவர் மாயமாகிறார். அவருக்கான காத்திருப்பும் அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களையும் பேசும் இப்படம் நல்லதொரு சஸ்பென்ஸ் டிராமா. நெட்பிஃளிக்ஸில் உள்ளது.
மேலும் ஆல்பங்கள்
#Malayalam
#cinema
#ott
#மலையாளம்
#ஓடிடி
#சினிமா
x