தோனி Vs தினேஷ் கார்த்திக் - ‘தீரன்’ டிகே கரியரின் 10 குறிப்புகள்


1 / 12
தோனி என்றொரு நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் ஏற்படாமல் போயிருந்தால், தலைமைத்துவத்துக்கான மூளை கொண்ட, நுண் திறன் படைத்த தினேஷ் கார்த்திக் என்ற என்ற வீரர் இந்தியாவுக்காக எத்தனைப் போட்டிகளில் ஆடியிருப்பார் என்று நினைத்து பார்த்தால், அவருக்கா வருந்தாமல் இருக்க முடியவில்லை.
2 / 12
ஐபிஎல் போட்டியில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியிருக்கிறது. அந்த அணியின் தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் 12 இன்னிங்ஸ்களில் 326 ரன்களை 187.35 என்ற ஸ்ட்ரைக் ரேட் எடுத்துள்ளார். ஆனால் அவரை விட குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பை அணியில் இருப்பது இந்திய அணித் தேர்வுக்குழுவின் புரியாத புதிர்களில் ஒன்று.
3 / 12
இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று 180 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ஆடியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய தோனியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 98 போட்டிகளில் 126.13 தான். ஆனால் தினேஷ் கார்த்திக் 60 போட்டிகளில் 142.61 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
4 / 12
இந்திய அணிக்காக 180 போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 94 முறை தோனி அணியில் இருக்கும் போது ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக இறங்கியுள்ளார். இவர் நிலையான டவுனில் இறக்கப்படவில்லை. இஷ்டபட்ட டவுனில் மேக் ஷிஃப்ட் பிளேயராக பயன்படுத்தப்பட்டதால் அவரால் தன் கரியரை குறிப்பிட்ட இன்னிங்ஸ்களுக்காக திட்டமிட முடியாமல் போய் விட்டது.
5 / 12
தோனியை விட 4 வயது சிறியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் டெஸ்ட்டிலும் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியில் தோனிக்கு ஓர் ஆண்டு சீனியர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20-யில் இந்தியா வென்ற போது இருவரும் அணியில் இருந்தனர். தினேஷ் கார்த்திக் அப்போட்டியில் ஆட்ட நாயகன்.
6 / 12
ஐபிஎல் போட்டிகளை எடுத்துக் கொண்டால் உண்மையில் தினேஷ் கார்த்திக் 6 வித்தியாசமான ஐபிஎல் அணிகளில் ஆடியுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் தன் பேட்டிங் திறமைகளை வளர்த்துக் கொண்டே வந்தார்.
7 / 12
இந்த சீசனில் அவர் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்கள், ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு பைன்லெக் திசையில் அடித்த ஷாட்கள் ஏராளம். எதிரணி கேப்டன்களை களவியூகம் செய்யவதில் திணறடித்தார். தன் கிரீஸ் நகர்தல்கள் மூலம் பவுலர்களை குழப்பி ரன்களைக் குவித்தார்.
8 / 12
இவர் அளவுக்கு பரிசோதனை முயற்சி ஷாட்களை முயற்சித்த வீரர்கள் இல்லை எனலாம். தோனி இருப்பதே கொண்டு நிறைவடைந்தார். கார்த்திக் சோர்வடையாமல் புது முயற்சிகளில், புதுமை புகுத்துவதில் ஈடுபட்டார். இந்த முறை கார்த்திக் ஸ்பின் பவுலிங்கில் ஆட்டமிழக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
9 / 12
இந்திய அணிக்காக ஆடுவதில் தோனியின் கதை 2019 உலகக் கோப்பையுடன் நிறைவுற தினேஷ் கார்த்திக் டி20களில் இந்திய அணிக்காக நீடித்தார்.
10 / 12
இப்போதும் கூட ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருடன் இவர் பெயரும் உலகக் கோப்பை செலக்‌ஷனில் பரிசீலிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
11 / 12
கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது தினேஷ் கார்த்திக்கைத்தான் கேப்டன்சி மூளை கொண்டவர் என்றார். தலைமையேற்று நடத்தும் நிதானம் பொறுமை, சாமர்த்தியம் கிரிக்கெட் திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
12 / 12
என்றாலும் தோனி என்ற ஒரு நிகழ்வினால் தினேஷ் கார்த்திக்கின் திறமை சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பது இந்திய கிரிக்கெட்டில் ஒரு வருத்தகரமான விஷயமே.
x