சென்னை: பத்திரப் பதிவு கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதார சுமை கூடியுள்ளது.
ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என்று நடைமுறைப்படுத்தியதால் ஏழை மக்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியது ஏற்புடையதல்ல. மேலும் வழிகாட்டி மதிப்பைசுமார் 50 சதவீதம் வரை உயர்த்தி வசூலிப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகிறார்கள். எனவே தமிழக அரசு பத்திரப்பதிவில் உயர்த்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.